ETV Bharat / bharat

‘ராஜபக்ச இந்தியா வருகை... நம்பிக்கையின்மைக்கு இடையே ஒரு முயற்சி’ - தில்ருக்‌ஷி - india and srilanka

இலங்கை நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை புரிந்துள்ளார். இச்சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் சாராம்சம் குறித்து கீழே காண்போம்.

பிரதமர் மோடி-பிரதமர் ராஜபக்சே
பிரதமர் மோடி-பிரதமர் ராஜபக்சே
author img

By

Published : Feb 9, 2020, 9:08 PM IST

இந்தியாவுடன் புவியியல் ரீதியாகத் தொடர்புடைய இலங்கை நாட்டின் புதிய அதிபர், புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு, மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். இலங்கையில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபராக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பதவியேற்ற பிறகு, முதன்முதலாக இந்தியாவுக்கு வருகை தந்தார். பிறகு அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்கிற வெளிநாட்டு கொள்கையின்படி, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமாரான பிறகு, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடிதான் இலங்கை அதிபர் கோத்தபயவின் முதல் வெளிநாட்டு விருந்தினர். இலங்கை அதிபர் கோத்தபய வருகைக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய சுற்றுப்பயணத்துக்கும் சற்று வித்தியாசம் உள்ளது. வெளிநாட்டு உறவுகளில் புதிய பிம்பத்தையும் நடுநிலை வகிப்பதையுமே கோத்தபய விரும்புகிறார். ஒரு நல்ல காரணத்துக்காகவே சக்தி வாய்ந்த பாதுகாப்புத்துறை தொடர்பான துறைகள் அனைத்தும் தன் சகோதரர் ராஜபக்சவின் கீழ் இயங்குவதை கோத்தபய விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். விடுதலைப்புலிகளை கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் தோற்கடித்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தங்களுக்கு இந்தியா உதவியதற்கும் கோத்தபய நன்றி தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறையாக பதவியில் அமர்ந்த ராஜபக்ச சீனாவுக்கு ஆதரவு கரம் நீட்டி இலங்கை நாட்டுக்கு சீன உறவே முக்கியத்துவம் என்பதை பகிரங்கப்படுத்தினார். இதனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பலருக்கும் வியப்பை அளிக்கவில்லை. ஆனாலும், இரு தரப்பு உறவுகளும் முற்றிலும் சீரழிந்துவிடவில்லை. உறவுகளில் விரிசல் விழுந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பது முக்கியமாகும். ராஜபக்ச கட்சி இரண்டாவது முறையாக இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த பிறகு, மேம்பாட்டை கருத்தில் கொண்டு இலங்கை அரசு சீன நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. சில முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் பணியில் இலங்கையில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தென் இலங்கை பகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளின் ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி

கடந்த 2015- ம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த, ராஜபக்ச எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டார். தனது மோசமான தோல்விக்கு இந்தியாவே காரணமென்று ராஜபக்ச வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். ராஜபக்ச இந்தியாவை விட சீனா மீதுதான் அதிக பாசம் கொண்டவர் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இந்தியாவுடன் ராஜபக்சவுக்குள்ள நெருக்கம் குறைந்து போனதையே அவரின் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக் காட்டியது. 2017- ம் ஆண்டு இலங்கைக்கான இந்திய தூதராக த்ரன்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட்டார். இலங்கையுடனாக இந்திய உறவை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே அவர் இந்த பணிக்கு அமர்த்தப்பட்டார். சீனாவுடனான இலங்கை உறவு வலுப்பட்ட நிலையில், இந்திய உறவு மேம்படுமா என்கிற கேள்வி எழுந்தது. த்ரன்ஜித் சிங் சாந்து பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை - இந்தியா உறவை வலுப்படுத்த முயன்றார். மனவருத்ததில் இருந்த ராஜபச்சேவை சமாதானப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜபக்ச ஒரு யதார்த்தமான அரசியல்வாதி, இதனால், இந்தியாவுடனான உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கூட, இந்தியாவுக்கு மூன்று முறை ராஜபக்ச வருகை தந்தார். ஒரு முறை தன் மகனும் எம்.பியுமான நமலையும் அவர் அழைத்து வந்திருந்தார். அப்போது, இருவரும் பிரதமர் மோடியை சந்தித்தனர். இப்போது, ராஜபக்சவின் சகோதரர் இலங்கை அதிபராக இருக்க , இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவில் மாற்றம் செய்வதை ராஜபக்ச விரும்புகிறார். இந்த பிரிவு பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கிறது. இதனால், இலங்கை அரசியலில் தன் செல்வாக்கு உயரும் என்று ராஜபக்ச நம்புகிறார். முந்தைய அரசு மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை புதிய அரசு மறுபரீசிலனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதில், மகிந்தா ராஜபக்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அடக்கம். சீன நிதி உதவியுடன் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு. இந்த விஷயங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மிகப் பெரிய வருத்தத்தை அளித்தது. அதேவேளையில், சீனாவுடன் இலங்கைக்குள்ள சர்ச்சைக்குள்ள ஒப்பந்தங்களின் சாதக பாதக பலன்களை ஆராய்ந்த, ராஜபக்ச இந்தியாவுடனான உறவை கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளார்.

மேலும் விடுதலைப்புலிகள் போருக்குப் பிறகு இலங்கையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் இலங்கையின் லட்சியமிக்க பல திட்டங்களுக்கு சீனா மட்டுமே ஆதரவளிக்க முன்வந்தது என்று ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள் அவர்களின் தேவையை முன்வைத்தே, இலங்கைக்கு உதவி செய்ய முனைந்தனர். அந்த தருணத்தில் இந்தியா கை விரித்தது என்றும் அந்த திட்டங்களை மேற்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இல்லையென்றும் திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா விருப்பம் கூட காட்டவில்லையென்றும் இலங்கை நிதித்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் ராஜபக்சவின் இலங்கை பொதுஜன கட்சி, மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட மாற்றம் செய்யுமளவுக்கு பலம் பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மாற்றத்தை செய்ய வேண்டிய தருணம் இது. நாட்டில் சீர்திருத்தங்களை செய்வதற்கு முன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை பேண வேண்டியதும் முக்கியம். தனது நான்கு நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்ச சந்தித்து பேசினார். பின்னர், வாரணாசி, சரஸ்வதி, புத்தகயா, திருப்பதி போன்ற புனிதத் தலங்களுக்கு செல்கிறார்.

Intro:Body:

ராஜபக்சே இந்தியா வருகை : நம்பிக்கையின்மைக்கு இடையே ஒரு முயற்சி- திருலெக்ஷி ஹான்டுநெட்டி

இந்தியாவுடன் புவியியல் ரீதியாக தொடர்புடைய இலங்கை நாட்டின் புதிய அதிபர், புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு ,ராஜபக்சே இந்தியாவுக்கு வந்துள்ளார். இலங்கையில் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தப்பய  அதிபராக பதவியேற்ற பிறகு.,  கடந்த 2019- ம் ஆண்டு நவம்பர் 19- ந் தேதி பதவியேற்ற பிறகு,  முதன் முதலாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.  பிறகு அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்கிற வெளிநாட்டு கொள்கையின்படி, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமாரான பிறகு, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்டார். பிரதமர் மோடிதான் இலங்கை அதிபர் கோத்தபயவின் முதல் வெளிநாட்டு விருந்தினர்.  இலங்கை அதிபர் கோத்தபய வருகைக்கும் பிரதமர் ராஜபக்சே இந்திய சுற்றுப்பயணத்துக்கும் சற்று வித்தியாசம் உள்ளது. வெளிநாட்டு உறவுகளில் புதிய பிம்பத்தையும் நடுநிலை வகிப்பதையுமே கோத்தபய விரும்புகிறார். ஒரு நல்ல காரணத்துக்காகவே சக்தி வாய்ந்த பாதுகாப்புத்துறை தொடர்பான துறைகள் அனைத்தும்  தன் சகோதரர் ராஜபக்சேவின் கீழ் இயங்குவதை கோத்தபய விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமானவர் தெரிவிக்கிறார்கள்.விடுதலைப்புலிகளை கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் தோற்கடித்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தங்களுக்கு இந்தியா உதவியதற்கும் கோத்தபய நன்றி தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறையாக பதவியில் அமர்ந்த  ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவு கரம் நீட்டி  இலங்கை நாட்டுக்கு சீன  உறவே முக்கியத்துவம் என்பதை பகிரங்கப்படுத்தினார். இதனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்,  இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பலருக்கும் வியப்பை அளிக்கவில்லை. ஆனாலும், இரு தரப்பு உறவுகளும் முற்றிலும் சீரழிந்துவிடவில்லை. உறவுகளில் விரிசல் விழுந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பது முக்கியமாகும். ராஜபக்சே கட்சி இரண்டாவது முறையாக இலங்கையில் ஆட்சியில் அம்ர்ந்த பிறகு, மேம்பாட்டை கருத்தில் கொண்டு இலங்கை அரசு சீன நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. சில முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் பணியில்  இலங்கையில் சீன அரசு  ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தென் இலங்கை பகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளின் ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தேர்தலில் தோல்வி

கடந்த 2015- ம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த,  ராஜபக்சே எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டார். தனது மோசமான தோல்விக்கு இந்தியாவே காரணமென்று ராஜபக்சே வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். ராஜபக்சே இந்தியாவை விட சீனா மீதுதான் அதிக பாசம் கொண்டவர் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இந்தியாவுடன் ராஜபக்சேவுக்குள்ள நெருக்கம் குறைந்து போனதையே அவரின் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக் காட்டியது. 2017- ம் ஆண்டு இலங்கைக்கான இந்திய தூதராக த்ரன்ஜித் சிங் சாந்து  நியமிக்கப்பட்டார். இலங்கையுடனாக இந்திய உறவை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே அவர் இந்த பணிக்கு அமர்த்தப்பட்டார்.  சீனவுடனான இலங்கை உறவு வலுப்பட்ட நிலையில், இந்திய உறவு மேம்படுமா என்கிற கேள்வியையே எழுந்தது.  த்ரன்ஜித் சிங் சாந்து பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை - இந்தியா உறவை வலுப்படுத்த முயன்றார். மனவருத்ததில் இருந்த ராஜபச்சேவை சமாதானப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜபக்சே ஒரு யதார்த்தமான அரசியல்வாதி, இதனால், இந்தியாவுடனான உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கூட,  இந்தியாவுக்கு மூன்று முறை ராஜபக்சே வருகை தந்தார். ஒரு முறை தன் மகனும் எம்.பியுமான நமலையும் அவர் அழைத்து வந்திருந்தார். அப்போது, இருவரும் பிரதமர் மோடியை சந்தித்தனர். இப்போது, ராஜபக்சேவின் சகோதரர் இலங்கை அதிபராக இருக்க , இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 19- வது பிரிவில் மாற்றம் செய்வதை ராஜபக்சே விரும்புகிறார். இந்த பிரிவு பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கிறது. இதனால், இலங்கை அரசியலில் தன் செல்வாக்கு உயரும் என்று ராஜபக்சே நம்புகிறார். முந்தைய அரசு மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை புதிய அரசு மறுபரீசிலனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதில், மகிந்தா ராஜபக்சே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அடக்கம். சீன நிதி உதவியுடன் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு.  இந்த விஷயங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மிகப் பெரிய வருத்தத்தை அளித்தது. அதேவேளையில், சீனாவுடன் இலங்கைக்குள்ள சர்ச்சைக்குள்ள ஒப்பந்தங்களின் சாதக பாதக பலன்களை ஆராய்ந்த, ராஜபக்சே இந்தியாவுடனான உறவை கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளார்.

போருக்குப் பிறகு இலங்கையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் இலங்கையின் லட்சியமிக்க பல திட்டங்களுக்கு சீனா மட்டுமே ஆதரவளிக்க முன்வந்தது என்று ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள் அவர்களின் தேவையை முன்வைத்தே,  இலங்கைக்கு உதவி செய்ய முனைந்தனர்.  அந்த தருணத்தில் இந்தியாவுக்கு கை விரித்தது என்றும்  அந்த திட்டங்களை மேற்கொள்ளும்  திறன் இந்தியாவுக்கு இல்லையென்றும் திட்டங்களை நிறைவேற்நுவதில் இந்தியா விருப்பம் கூட காட்டவில்லையென்றும்   இலங்கை நிதித்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த  இலங்கை தேர்தலில் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன கட்சி, மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட மாற்றம் செய்யுமளவுக்கு பலம் பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மாற்றத்தை செய்ய வேண்டிய தருணம் இது. நாட்டில் சீர்திருத்தங்களை செய்வதற்கு முன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை பேண வேண்டியதும் முக்கியம். தனது 4 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். பின்னர், வாரணாசி, சரஸ்வதி, புத்தகயா, திருப்பதி போன்ற புனிததலங்களுக்கு செல்கிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.