கடந்த மாதத்தில் பிகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் கடும் வெள்ள பாதிப்பிற்குள்ளாகின. குறிப்பாக, அஸ்ஸாம், பிகார் மாநிலங்கள் கடும் சேதத்திற்குள்ளாகின. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 57,113 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மீண்டும் அம்மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக 109 கிராமங்களைச் சேர்ந்த 34 ஆயிரம் பேர் பெரும் பாதிப்பைக் கண்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 200 ஹெக்டேர் விளை நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு அஸ்ஸாம் பகுதியைச் சேர்ந்த தீமாஜி, லகிம்பூர், பிஸ்வநாத், சிராங் ஆகிய மாவட்டங்கள் இந்த வெள்ளத்தின் காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை விற்க வேண்டும் அல்லது இழுத்து மூட வேண்டும் - கைவிரித்த மத்திய அமைச்சர்