இதுகுறித்து, கார்வா காவல் நிலைய ஆய்வாளர் சந்தோஷ் திவாரி கூறும்போது, “நான்கு சிறுவர்களும் ஆற்றில் குளிக்க ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்த சிறுவர்களில் ஒருவரான ஆனந்த்குமார் (13) என்பவரின் உடல் உத்தரப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.மேலும் 15 வயது நிரம்பிய அமித் குமார், ரோஹித் குமார், ராகுல் பைஸ் ஆகியோரைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சியல் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.
மேலும்,உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.