மகாராஷ்டிராவில் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க வழியின்றி தவித்த பாலியல் தொழிலாளர்கள் நான்கு பேர் அத்தொழிலைக் கைவிட்டு மாற்றுத் தொழிலைத் தேட முடிவு செய்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள பிவாண்டியின் ஹனுமான் மலைப் பகுதியில், 14 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள், சாதாரண வாழ்க்கையை நடத்தி தன்னிறைவு பெறுவதாக முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீ சாய் சேவா சமூக அமைப்பு 500 பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவி வரும் சூழலில் பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டு, மக்கள் மத்தியில் பிற வாழ்க்கை வழிகளைக் கண்டறியவும் தன்னம்பிக்கையுடன் வாழ்வது குறித்தும் பயிற்சி அளித்தது.
பின்னர் இந்த அமைப்பின் உதவியுடன், நான்கு பெண்களுக்கும் ஊதுவத்தி குச்சிகளை தயாரிப்பதற்கும், தீபாவளி விளக்குகள் தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களது தொழிலை மேம்படுத்த 'சிச்சி ஹவுஸ்' என்ற பெயரில் ஒரு வீடு வழங்கப்பட்டது.
பிற சமூக நலக் குழுக்களுடன் இந்த அமைப்பு இணைந்து, ஊரடங்கு காலத்தில், பாலியல் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்களை வழங்கியது.