சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் என்று கூறப்படும் வட்டமடிப்பான் கலனிலிருந்து பிரிந்து லேண்டர் என்று கூறப்படும் விக்ரம் நாளை (செப்டம்பர் 7) நிலவில் உள்ள தென்துருவப்பகுதியில் அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரையிறங்க உள்ளது.
அதன் பிறகு லேண்டரில் உள்ளிருக்கும் ரோவர் என்று சொல்லப்படும் பிரக்யான் ரோபாட்டிக் இயந்திரம் காலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள், லேண்டரிலிருந்து வெளியே வரும். அதனையடுத்து அது நிலவின் தென் துருவத்தின் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்; சந்திரயான்-1, சந்திராயன்-2 விண்கலன்களை ஒப்பிட்டு வித்தியாசங்களை தெரிவித்தார்.
அதில் "சந்திரயான்-1 ஒரு தசாப்தத்திற்கு முன் நிலவை படம் எடுக்க அனுப்பப்பட்டது. ஆனால்
- சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது.
- சந்திரயான்-1 விண்கலன் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்பப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது
- ஐரோப்பா, அமெரிக்கா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் கோள்களை சுமந்து சந்திரயான்-1 விண்ணுற்குச் சென்றது. ஆனால், சந்திரயான் 2 அவ்வாறு அல்ல" என்று குறிப்பிட்டார்