ETV Bharat / bharat

தமிழ் என் உயிர் மூச்சு - வையகம் போற்றும் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள்

author img

By

Published : Aug 7, 2020, 12:30 AM IST

Updated : Aug 7, 2020, 5:46 AM IST

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் கருணாநிதி. திமுக என்ற கட்சியின் வாயிலாக மாநில சுய உரிமைக்காக தொடர்ந்து மத்திய அரசுடன் போரிட்டவர். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரின் போராட்ட வாழ்வைப் பற்றி இத்தொகுப்பின் மூலம் காணலாம்.

கலைஞர்
கலைஞர்

கடந்த 1924ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேல், அஞ்சுகம் அம்மாள் தம்பதிக்கு நன்மகனாய் தோன்றிய தட்சினாமூர்த்தி, பின்னாளில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கும் அரசியல் தலைவர் கருணாநிதியாக உருவெடுக்க கலையும் அரசியலும் முக்கிய காரணங்களாலும்.

கலையும் கலைஞரும்:

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனது சினிமாத்துறை. அந்தத் துறையை சரியாக பயன்படுத்தி பெருந்திரளான மக்கள் கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்தார் கருணாநிதி. தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக முத்தமிழ் அறிஞர், கலைஞர் என அழைக்கப்பட்டார். திமுக திரைத்துறையின் வாயிலாக தமிழ் மக்களை தன் பக்கம் ஈர்த்தது, அதில் கலைஞரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

கருணாநிதி
கருணாநிதி

கருணாநிதியின் அரசியல் எதிரிகள் கூட தமிழ் சினிமா மற்றும் இலக்கியத்தில் அவரது பங்களிப்பை பார்த்து வியந்தார்கள் என்ற மிகையாகாது. 1944ஆம் ஆண்டு ஜுபிட்டர் பிக்சர்ஸில் திரைக்கதை ஆசிரியராக கருணாநிதி சேர்ந்தார். 1947ஆம் ஆண்டு அவர் முதன்முதலாக திரைக்கதையில் பணியாற்றிய ராஜகுமாரி திரைப்படம் வெளியானது.

கடந்த 1952ஆம் ஆண்டு அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புராண, இதிகாச காவியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த எளிய மக்களின் சினிமாவாக இன்றளவும் பராசக்தி கொண்டாடப்படுகிறது. சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள் உள்ளிட்ட சமூக அவலங்களை கேள்விக்குள்ளாக்கிய பராசக்தி பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியானது.

அதிகாரவர்க்க கும்பல்களை பராசக்தி இன்றும் அச்சுறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படத்துக்கு தடை விதிக்கப்பட்டது அதற்கு ஒரு உதாரணம். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், மனோகரா உள்ளிட்ட 70 படங்களுக்கு கருணாநிதி திரைக்கதை எழுதியிருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர்களை பார்ப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியல் சாணக்கியன் அல்ல சிந்தனையாளன்

கருணாநிதி
கருணாநிதி

பெரியாரின் தம்பிகளான அண்ணாவும் கலைஞரும் வாக்கரசியல் வாயிலாக மக்களுக்கு பெரிய அளவில் உரிமைகளை பெற்றுத்தர முடியும் என நம்பினார்கள். இதன்விளைவாக, திமுக என்ற கட்சி தோன்றியது. தமிழ்நாட்டு அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் கருணாநிதி. மக்கள் செல்வாக்கோடு 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றவர் கருணாநிதி.

முத்தமிழ் அறிஞர்
முத்தமிழ் அறிஞர்

2018ஆம் ஆண்டு, ஜூலை 27ஆம் தேி இந்திய அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒரு சாதனைக்கு சொந்தக்காரரானார் கருணாநிதி. திமுக என்ற கட்சியை 50 ஆண்டு காலம் தலைவராக இருந்து கட்டிக்காத்த பெருமை அவரை வந்தடைந்தது.

சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு பெற்றுதந்தவர் கருணாநிதி. கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பு அந்த உரிமை மறுக்கப்பட்டு வந்தது. பிரதமராக வாய்ப்பு வந்தபோது, என் உயரம் என்னவென்று எனக்கு தெரியும் என வாய்ப்பை மறுத்தார்.

போராட்ட வாழ்வு:

'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தனது சுயசரிதையை 1974ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார் கருணாநிதி. இது அவரது பெரும்பான்மையான வாழ்க்கையை அறிய அது ஏதுவாக இருக்கும். முதலமைச்சராக இருந்தபோதும் அவர் எழுதுவதை நிறுத்தவேயில்லை. 1969ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று திமுக தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி, 1971ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை மாபெரும் வெற்றியடையச் செய்தார்.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து தனது பதவியை துறந்தவர் கருணாநிதி. 1972ஆம் ஆண்டு திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான எம்ஜிஆர், திமுகவை விட்டு பிரிந்து சென்று அதிமுக எனும் கட்சியைத் தொடங்கினார். 1976ஆம் ஆண்டு தனது ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் 1980ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கலைஞர் கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி கண்டார். இது எம்ஜிஆருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் வெற்றிபெற்றார்.

கலைஞர்
கலைஞர்

1996ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். 1999ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் அரசில் ஒரு அங்கமானார். 2004 மக்களவை தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றிகண்டார். இந்தக் கூட்டணி 2014 வரை தொடர்ந்தது. பின், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட திமுக பெரிய தோல்வியை சந்தித்தது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாபெரும் எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கருணாநிதியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 1930 வாக்கில் பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டது. தமிழ் அறிஞர்கள் அதற்கு எதிராக கொந்தளித்தனர். கருணாநிதியின் அரசியல் பயணம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது.

1938ஆம் ஆண்டு 14 வயதே ஆன கருணாநிதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களம் காண்கிறார். அந்த சமயத்தில் அவர் எழுதிய கவிதைகளை திமுககாரர்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர். தனது வயதையொத்த மாணவர்களுடன் சேர்ந்து ரிக்‌ஷா ஒன்றில் இந்தி எதிர்ப்பு பரப்புரையை தொடங்குகிறார். அதில் தமிழ் தாயை இந்தி எனும் கத்தி கொண்டு ராஜாஜி கிழிப்பது போன்ற பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

சமூக நீதிக்கான போராட்டம்

1969ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சாதிய இடஒதுக்கீட்டில் உரிமையைப் பெற அடித்தளமிட்டார். ஏ.என். சட்டநாதன் தலைமையின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 25 சதவிகித்திலிருந்து 31 சதவிகிதமாக கருணாநிதி உயர்த்தினார். அதேபோல் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 16 சதவிகித்திலிருந்து 18 சதவிகிதமாக மாற்றப்பட்டு, மொத்த இடஒதுக்கீடு 49% ஆக்கப்பட்டது. சமூக நீதிக்காக போராடிய கருணாநிதி, தொடர்ந்து பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தார்.

வையகம் போற்றும் கலைஞர்
வையகம் போற்றும் கலைஞர்

மறைவுக்குப் பின்னும் போராட்டம்

வாழ்நாளெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய கருணாநிதி, தனது மறைவுக்குப் பின்னும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கருணாநிதி தனது அண்ணனாக கருதியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை. அவரது சமாதி அருகே தனது சமாதி அமைய வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பமாக இருந்தது.

கருணாநிதி
கருணாநிதி

50 ஆண்டு காலம் மக்கள் பணி செய்த ஒரு தலைவருக்கு அந்த இடத்தைக்கூட தர மறுத்தது ஆளும் அதிமுக அரசு. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, பெரும் போராட்டத்துக்கு பிறகு அந்த இடம் பெறப்பட்டது. இப்படி தன் வாழ்நாள் மட்டுமின்றி மறைந்த பின்னும் போராடி வென்றவர் கருணாநிதி.

இதையும் படிங்க: 'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மேற்காசிய நாடுகளுடனான உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'

Last Updated : Aug 7, 2020, 5:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.