சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி (74), ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவர் கோமா நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஆடியோ தெரபி சிகிச்சை அளித்துவருகின்றனர். அவருக்குப் பிடித்த பாடல்களை இயர்போன்களில் கேட்கச் செய்கின்றனர்.
அஜித் ஜோகி, இருதய மற்றும் சுவாசக் கோளாறால் மே 9ஆம் தேதியன்று ஸ்ரீ நாராயண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித் ஜோகியின் உடல் நிலை குறித்து தெரிவித்த மருத்துவர் சுனில் கெம்கா, “தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளது. கோமா நிலையில் உள்ளார்.
அவரது நரம்பியல் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. டாக்டர்கள் அவரது மூளை செயல்பாட்டை புதுப்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் அவருக்கு ஒரு 'ஆடியோ தெரபி' கொடுக்கத் தொடங்கினோம்” என்றார்.
ஜோகி, 2000ஆவது ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில் மாநில முதல் முதலமைச்சராக பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி ஜந்தா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜோகி) என்ற கட்சியை உருவாக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்'- நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்