வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச. 27) கத்தார் புறப்படுகிரார். அங்கு கத்தார் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், கரோனா காலத்தில் கத்தாரில் இருந்த இந்தியர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டதற்காக அந்நாட்டிற்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.
முதல் முறையாக கத்தார் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பரஸ்பர உறவுகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இதையும் படிங்க...நெருங்கும் தேர்தல் மீண்டும் ஆட்சியமைக்குமா அதிமுக ?