பெங்களூரு (கர்நாடகம்): இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், விஷால் மெகா மார்ட் பல் பொருள் அங்காடியுடன் கைகோர்த்து 26 நகரங்களில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி, கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், பானங்கள், சோப்பு, பற்பசை, பிற அத்தியாவசிய பொருட்கள் போன்ற 365 பொருட்களை வாடிக்கையாளர்கள் பதிவுசெய்தால் வீடுகளுக்கே கொண்டுவந்து விநியோகம் செய்யப்படும்.
ஒரு நுகர்வோர் ஃபிளிப்கார்ட் செயலி மூலம் ஒரு ஆர்டரை செய்தவுடன், விநியோக நிர்வாகிகள் அருகிலுள்ள விஷால் கடையில் இருந்து பொருட்களை சேகரித்து, வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று வழங்குவார்கள் என்று நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பட்டியலில் உள்ள 26 நகரங்கள்: பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, என்.சி.ஆர்-டெல்லி, குர்கான், காஜியாபாத், நொய்டா, ஃபரிதாபாத், பாட்னா, கோவா, கௌஹாத்தி, அமிர்தசரஸ், ஜலந்தர், ஜெய்ப்பூர், பரேலி, வாரணாசி, லக்னோ, கான்பூர், அலிகார், டெஹ்ராடூன், குவாலியர், ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் புவனேஸ்வர்.