ETV Bharat / bharat

தனி விமானம் மூலம் கரோனா பரிசோதனைக்கு வந்த மத்தியப்பிரதேச மாதிரிகள்! - ஜிப்மர்

புதுச்சேரி: மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 1500 நபர்களுக்கு கரோனா நோய் கண்டறியும் வகையில் உமிழ்நீர், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் புதுச்சேரி கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அவை ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

flight_lab_test_jipmer
flight_lab_test_jipmer
author img

By

Published : Apr 24, 2020, 4:14 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோரிமேட்டில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்துசெல்கின்றனர். தற்போது கரோனா நோய் தடுப்பு ஊரங்கு உத்தரவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுப்பிடிக்காதநிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய பிசிஆர், ரேபிட் டெஸ்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆயிரத்து 500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்யும் வகையில், வைரஸ் அறிகுறி உள்ளவர்களின் உமிழ் நீர், ரத்த மாதிரிகள் தனி விமானம் மூலம் பாதுகாப்புடன் இன்று மதியம் மருத்துவக்குழுவினரோடு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உமிழ்நீர், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் புதுச்சேரி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது

பின்னர் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து, மருத்துவக் குழுவினர் தனி ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாதிரிகளை ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இதையும் பார்க்க: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்ப ஒப்படைத்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.