புதுச்சேரி சாத்தமங்கலம் கிராமத்தில, பல சிறுமிகள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு, வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு புகார்கள் அளிக்கப்பட்டன.
அந்தப் புகாரின் அடிப்படையில், குழந்தைகள் நல குழும அலுவலர்கள், சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வாத்து வியாபாரி தனது வீட்டில் இரண்டு சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல, மேலும் மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், "வறுமையை பயன்படுத்திச் சிறுமிகளின் குடும்பத்திற்கு அவ்வப்போது சிறிய தொகையை கொடுத்துவிட்டு, குழந்தைகளிடம் வேலை வாங்கி வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும், சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொத்தடிமைகளாக இருந்த இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்!