பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், முதல் தேர்தலில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சி ஐந்து இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை சந்திக்க ஹைதராபாத்திற்குச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு கட்சி சார்பில் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிகார் தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மூன்றாம் அணியில் இடம்பெற்றிருந்த, ஏஐஎம்ஐஎம் கட்சி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது.