கர்நாடக மாநிலம் மொலகல்முரு தாலுக்கா, பி.கே. கெரே கிரமம் அருகே இன்று காலை பெங்களூரிலிருந்து லிங்கசுகூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாகத் தகவலறிந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் திம்மண்ணா (40), ரத்னம்மா (38), மகேஷ் (19), துர்கப்பா (16) மற்றும் 55 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.