மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக புனேவில் உள்ள சங்கர் நகர் என்னும் இடத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக புனே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அம்மாவட்ட ஆட்சியர் நாவல் கிஷோர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதையும் பார்க்க : 'மழை வரப்போகுதே...'- மாணவர்களைக் காக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!