ETV Bharat / bharat

சிறப்பு விமானம் மூலம் கேரளா வந்தடைந்த இந்தியர்கள்...!

கொச்சி: கரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அபிதாபி, துபாயில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 363 பேர், மத்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் நேற்று இரவு நாடு திரும்பினர்.

first-flight-carrying-stranded-indians-from-abu-dhabi-lands-at-kochi

author img

By

Published : May 8, 2020, 10:02 AM IST

கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் பலரும் நாடு திரும்ப முடியாமல் சிக்கினர். இவர்களை அழைத்து வரும் பொருட்டு, மத்திய அரசு சார்பாக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதன் முதல்கட்டமாக துபாய், அபுதாபியில் சிக்கியிருக்கும் 363 நபர்களை அழைத்துவர இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பப்பட்டன. அதில் ஏர் இந்தியா 1X 452 விமானத்தில் நான்கு குழந்தைகள் உள்பட 177 பயணிகள் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இதனைத்தொடர்ந்து துபாயிலிருந்து 5 குழந்தைகள் உள்பட 177 பயணிகள் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நாடு திரும்பிய 363 பேருக்கும் உடனடியாக கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா திரும்பிய அனைவரும் 14 நாள்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில், முதன்மைச் செயலாளருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.