டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி, இந்த தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அலுவலர் கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள கார்டியோ - நியூரோ மையத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீயை அணைக்க 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ தற்போது அணைக்கப்பட்டுவிட்டது" என்றார்.
இந்த தீ விபத்தில் பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பதையும் தீயணைப்பு அலுவலர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: மிக நீண்ட பட்ஜெட் உரை அல்ல வெற்று உரை - ராகுல் காந்தி