திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.25) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தலைமை செயலகத்தின் வடக்கு பிளாக்கில் கொளுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தலைமை செயலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். மேலும், “இந்தத் தீ விபத்து, விபத்து அல்ல.. இது திட்டமிட்ட சதி. தங்கக் கடத்தல் வழக்கில் உள்ள ஆவணங்களை அழிக்கும் முயற்சியாக இது நடந்துள்ளது” என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.
தீ விபத்து குறித்து தலைமை செயலகத்தின் கூடுதல் செயலர் பி.கனி கூறுகையில், “மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. முக்கியமான கோப்புகள் எதுவும் அழிக்கப்படவில்லை. அவைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன” என்றார்.
தலைமை செயலகத்தல் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினரின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்திய ஸ்வப்னா சுரேஷ்?