வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடுதல் நிவாரண உதவி வழங்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், கேரளாவிற்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையை அம்மாநில அரசு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இதற்கு விளக்கமளிக்குமளிக்கும் விதமாகக் கேரள நிதியமைச்சரும் ஆலப்புழா சட்டப்பேரவை உறுப்பினருமான தாமஸ் ஐசக் ஈடிவி பாரத் செய்திகளுக்குப் பிரத்தியேக பேட்டி வழங்கியுள்ளார்.
அதில் பேசிய அவர், கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் நிதியுதவி குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பாஜக உள்ளிட்ட சிலர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. நிதியுதவிகள் சரியான வகையில் பயன்படுத்தப்பட்டு அதன் பலன்கள் முழுவதும் மக்களுக்கே செல்கின்றன. எனவே, தவறான தகவல்களை நம்பாமல் மக்கள் தாராளமாக உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா, வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதி மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.