"டிஆர்டிஓ உருவாக்கிய ராணுவ போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணையின் இறுதி சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை காலை 6:45 மணிக்கு ராஜஸ்தானில் உள்ள போக்ரான் கள துப்பாக்கிச் சூடு எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணை 4- 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது பகல்,இரவு நேரங்களில் அனைத்துவிதமான எதிரி டாங்குகளை அழிக்கக்கூடிய சிறந்த தாக்குதல் திறன்களைக் கொண்டுள்ளது.
ராணுவம் தற்போது இரண்டாம் தலைமுறை மிலன் 2டி மற்றும் கொங்கூர் ஏடிஜிஎம்களைப் பயன்படுத்திவருகிறது. எதிரிகளின் டாங்கர்கள் முன்னேறுவதை தடுப்பதற்கு முக்கிய பங்குவகிக்கும் மூன்றாம் தலைமுறை ஏவுகணைகளைத் படையில் சேர்க்கும் நோக்கில் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்திய ராணுவத்திற்கு 300 நாக் ஏவுகணைகள் மற்றும் 25 நாமிகாக்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் 2018ஆம் ஆண்டில் அனுமதி வழங்கியது.