ETV Bharat / bharat

மத்திய அரசின் உணவு பொருள்கள் சேமிப்பு கிடங்கு மீண்டும் இயங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல் - அதிமுக எம்எல்ஏ

புதுச்சேரி: மத்திய அரசின் உணவு பொருள்கள் சேமிப்பு கிடங்கு மீண்டும் புதுச்சேரியில் இயங்க வேண்டும் என அதிமுக அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ
அதிமுக எம்எல்ஏ
author img

By

Published : May 13, 2020, 9:49 AM IST

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உணவு சேமிப்பு கிடங்கில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது. அத்தோடு புதுச்சேரி சரக்கு ரயில் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியும் நடைபெற்றதுடன், இந்த போக்குவரத்து மூலம் வரும் பொருள்கள் சேமிப்பு குடோனில் சேமிக்கப்பட்டடு வந்தது. இந்தப் பணிகளை மத்திய அரசு தற்போது முற்றிலும் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து உப்பளம் தொகுதி ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய அரசின் உணவு பொருள் சேமிப்பு கிடங்கை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் கூறுகையில், ”முதலமைச்சர், மாநில ஆளுநர், சமூக நலத்துறை அமைச்சர் மத்திய அரசிடம் பேசி புதுச்சேரிக்கு நேரடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மாநிலத்துக்கு தேவையான பல்வேறு தளவாட பொருள்கள் வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி ரயில் நிலையம் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு புதுச்சேரி மாநிலத்துக்குள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படாமல், அருகே உள்ள தமிழ்நாடு பகுதியான கண்டமங்கலத்திலுள்ள சரக்கு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடோன்களில் சரக்குகள் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்தே விநியோகிக்கப்பட்டது.

புதுச்சேரியை தற்போது ஆளும் அரசானது உப்பளம் தொகுதியிலுள்ள மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான குடோன்களில் பொருள்களை சேமித்து வைக்க, புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு சரக்கு போக்குவரத்து ரயில்களை இயக்க வேண்டும். இதனால் மாநில பொருளாதாரம் மேம்படுவதுடன், மத்திய அரசின் உணவுப் பொருள்கள் நேரடியாக கொண்டுவர முடியும்.

இதன் மூலம் புதுச்சேரிக்கான உணவுப் பொருள்கள் தமிழ்நாடு பகுதியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டுவருவதற்கான கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படும். காலதாமதம், கால விரயமும் தவிர்க்கப்படும். அத்துடன் புதுச்சேரி மாநிலத்தில் பல நூற்றுக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும்” என்றார்.

இதையும் படிங்க: வரலாற்றை மாற்றிய கரோனா: தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு சரக்கு கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.