ETV Bharat / bharat

’இது மைல்கல் கல்ல, விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்ட கல்!’ - யோகேந்திர யாதவ்

”பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுவதுபோல் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் மைல்கல் அல்ல, மாறாக விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டுள்ள கல்” என ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ்
author img

By

Published : Sep 22, 2020, 7:33 AM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கலந்து கொண்டார். அப்போது ஈ டிவி பாரத் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியைக் காண்போம்.

வேளாண் மசோதா எதிர்ப்புப் போராட்டங்கள் கர்நாடகாவில் எந்த நிலையில் உள்ளன?

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்தச் சட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பானது அல்ல மாறாக நிலங்களை சிதைக்கக்கூடியவை என அவர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மட்டும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சியினர்தான் எதிர்க்கின்றனர் என்றும், சில இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் செயல்படுகின்றனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இங்கே காங்கிரஸ் கட்சியினர் எங்கு உள்ளனர்? எனக்கு ஒரே ஒருவரைக் காண்பியுங்கள். தங்களது எதிர்காலத் தலைமுறையை பாதிக்கும் இந்தச் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கின்றனர்.

விவசாயத்தில் கார்ப்பரேட் சட்டங்களை இது அறிமுகப்படுத்துகிறது. விவசாயிகள் இதை விரும்பவில்லை. அதனால்தான் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் வரும் 25ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கத்திற்குக் காண்பிக்கப்போகும் நாள் அது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த மசோதாக்கள் நிறைவேற்றத்தை ஒரு மைல்கல் என்றும், இது தற்போதைய விவசாய சூழ்நிலையை எளிமைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளாரே?

இது ஒரு மைல்கல் அல்ல, வெறும் கல். அதுவும் விவசாயிகளின் கழுத்தை நெறிக்கக் கூடிய ஒன்று. அப்படித்தான் அவர்கள் இந்த மசோதாக்களை குறிப்பிடுகிறார்கள். இவை வரலாற்று மசோதாக்கள் அல்ல, வரலாற்றுத் தவறு. இந்திய விவசாயிகளுக்கு இது வரலாற்று சோகம். இந்த மசோதா, சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பொருள்களை அதிகரித்து அவற்றின் மூலம் ஏற்றத்தாழ்வுகள் உருவாக வழிவகுக்கும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யோகேந்திர யாதவ்

இவை நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு இன்று கிடைக்கும் குறைந்தபட்சத் தொகைகூட கிடைக்காது. அதனால்தான் நாட்டின் ஒவ்வொரு உழவர் சங்கமும் எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக போராடுகிறது. இது ஒரு குறைந்தபட்ச உத்தரவாத விலை. அரசாங்கமும் பிரதமரும் நேர்மையானவர்கள் என்றால், இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

வேளாண் மசோதாக்கள் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வரும் 25ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அது கிராம மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த மசோதாக்களை திரும்பப் பெற்று குறைந்தபட்ச ஆதாரவு விலையை நிர்ணயிக்கும் வரை விவசாயிகள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஜனநாயக இந்தியாவில் தொடரும் அடக்குமுறை: எம்பிக்கள் சஸ்பெண்ட் பற்றி ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.