டெல்லி: வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “புதிய வேளாண் சட்டத்தின் மூலம் வேளாண் துறை வலுவடைவது மட்டுமில்லாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும் உறுதுணையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, 2013 - 2014 முதல் 2019 - 2020 வரை நாட்டில் கோதுமையின் உற்பத்தி அதிகரித்துள்ளது என தெரிவித்திருக்கும் அவர், அதனைக் குறிக்கும் ஒரு வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், “2013 - 2014ஆண்டில் 250.92 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கோதுமை, 2019 - 20ஆம் ஆண்டில் 341.33 லட்சம் மெட்ரிக் டன்னாக வளர்ச்சிக் கண்டுள்ளது. இது 90.41 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் உற்பத்தியாகும்” என்று குறிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் 2021-22: பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர்
“நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரட்டிப்பு செய்யவே பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் விவசாயிகள் நிலை உயர்ந்த நிலையிலே உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.