ETV Bharat / bharat

விவசாயிகள், நுகர்வோரை பாதுகாக்கும் விதிமுறைகள் தேவை: மகேந்திர தேவ் நேர்காணல்

author img

By

Published : Sep 24, 2020, 9:11 AM IST

மும்பை: மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சுரண்டப்படாமல் பாதுகாக்கும் வகையில் விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என வேளாண் துறை வல்லுனர் மகேந்திர தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

Farm bill
Farm bill

வேளாண் துறையில் அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திரமான தாராளமயமான சந்தையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இரண்டு புதிய மசோதாக்களையும் ஒரு சட்ட திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்தியது. இவை நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

இந்தப் புதிய மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும், விலை இறக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் குறையும், வேளாண் துறையில் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் குவியும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், இது பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படும் என எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், வேளாண் சட்ட மசோதாக்கள் தொடர்பாக இந்திராகாந்தி வளர்ச்சி ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர். மகேந்திர தேவ் ஈடிவி பாரத் செய்திகளிடம் கலந்துரையாடினார்.

இவர், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து அரசிக்கு பரிந்துரைக்கும் வேளாண் பொருட்கள் செலவு மற்றும் விலை ஆணையத்தின் ( Commission for Agriculture Cost and Prices) முன்னாள் தலைவர் ஆவார்.

மகேந்திர தேவ் நேர்காணல்

ஒப்பந்த விவசாயத்தில், சிறு, குறு விவசாயிகள் பெரு நிறுவனங்களுடன் சமதளத்தில் வர்த்தகம் செய்ய இயலுமா?

ஒப்பந்த விவசாய மசோதா ரிலையன்ஸ், அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். சிறு, குறு விவசாயிகளால் பெரிய நிறுவனங்களுடன் பேரம் பேச முடியாது. இதனால், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் விவசாயிகள் ஒன்றுபட்டு பெரிய நிறுவனங்களுடன் பேரம் பேசி உரிய விலையை பெற வேண்டும்.

ஒப்பந்த விவசாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை முறைப்படி களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் அதிக அளவிலான படிப்பறிவு குறைவான விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.தற்போதைய சூழ்நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையைவிட சந்தையில் பொருட்களின் விலை குறைவாக இருந்தால், நிறுவனங்கள் விவசாயியை விட்டு வெளியே சென்று பொருட்களை வாங்குகின்றனர்.

அதேபோல், ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையைவிட சந்தையில் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் விவசாயிகள் ஒப்பந்தத்தை மீறி பொருட்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.மேலும், இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் தீர்க்க வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில நேரங்களில் பணக்காரர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனை களைய சட்டப்பூர்வமான வழிமுறைகள் தேவை.

வேளாண் மசோதாக்கள் மூலம் இடைத்தரகர்கள் முற்றிலுமாக நீக்கப்படுவார்கள் என அரசு கூறியுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமாகுமா?

விவசாய விளை பொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களை முற்றிலுமாக தவிர்ப்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். பெருநிறுவனங்கள் பல்வேறு சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொருட்களை கொள்முதல் செய்து தரத்தை பரிசோதனை செய்வது கடினமானது என்பதால் இடைத்தரகர்கள் மூலமே விற்பனை நடைபெறும்.நாட்டின் சில இடங்களில் அறுவடைக்கு முன்பே விவசாயிகளுக்கு தேவையான பணத்தை இடைத்தரகர்கள் வழங்குகின்றனர். இதுபோன்ற சூழலில் குறிப்பிட்ட விவசாயி அந்த இடைத்தரகரிடம் மட்டுமே விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். இந்த நடைமுறைகள் மாறுவதற்கு நீண்ட காலம் ஆகும்.

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நாட்டில் உணவு பதுக்கல் அதிகரித்து, உணவு பொருட்களின் விலைவாசி உயரும் என வேளாண் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனரே?

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் நீக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர். இது மிகவும் பழமையான சட்டம். ஆனால், உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவது, அதன் மூலமாக விவசாயிகளும், பொதுமக்களும் சுரண்டப்படுவதை தடுக்க சில உறுதியான விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை மூலம் அரசு கொள்முதல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

தற்போது குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை நீக்கப்படாது என அரசு கூறியுள்ளது. வருங்காலத்தில் இவை மெல்ல மெல்ல நீக்கப்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். அதில் உண்மையும் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் வேளாண் பொருட்கள் செலவு மற்றும் விலை ஆணையத்தின் அறிக்கை ஒன்றில், குறைந்தபட்ச ஆதார விலை முறையை நிறுத்திவிட்டு, தாராள சந்தை மூலம் விவசாயிகள் அதிக அளவு வருவாய் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.குறைந்தபட்ச ஆதார நடைமுறையில் சில பிரச்சினைகளும் உள்ளன.

குறிப்பாக 23 பயிர்களுக்கு இவை அறிவிக்கப்பட்டாலும் வெறும் அரிசியும் கோதுமையும் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதுவே கடந்த 50 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறை மூலம் பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே பயன்பெற்றுள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மூலமாக வெறும் 10 சதவீத விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கும் வருவாயை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்காக உயராது. இதற்கு பயிர்கள் பரவலாக்கப்பட வேண்டும். தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை மட்டுமே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருவதால் நீர்வளம், நிலவளம் பாதிக்கப்படுவதோடு மற்ற பயிர்கள் பயிரிடப்படுவதும் குறைகிறது. இதனை சரிசெய்ய அரசு, அரிசி மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதை குறைத்துக்கொண்டு மற்ற பயிர்களை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும்.

அதேபோல உணவு சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். மற்றொரு முக்கிய நடவடிக்கையாக வேளாண் பொருட்கள் வர்த்தகத்தில் இருந்து இடைத்தரகர்கள் நீக்கப்பட வேண்டும்.

மேலும், வேளாண் துறையில் அதிக அளவிலான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை தொழில்துறை மற்றும் சேவைத் துறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் தற்போது இது சாத்தியமாகாது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.