மேற்குவங்க மாநிலம் பெஹாலாவில் 55 வயதான நபரொருவர் ஜூலை 26ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். அதுமட்டுமில்லாது அன்றைய தினம் அவர் கரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளார்.
உள்ளூர் தகவல் படி, இறந்தவரின் குடும்பத்தினர் இதுகுறித்து உடனடியாக கொல்கத்தா மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர், காவல் துறையினர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் அவர்களிடமிருந்து உடல் தகனம் செய்வது குறித்தான எந்த ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை. இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களும், அக்கம்பக்கத்தினரும் உடல் தகனம் குறித்து நேற்று.(ஜூலை 27) மதியம் வரை எந்த பதிலும் இல்லை என்று கூறினர்.
இதற்கிடையில் இறந்தவரின் குடும்பத்தில் ஆறு குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெஹாலாவின் சஹாபூரில் வசிப்பவர்கள் இப்பகுதியில் வைரஸ் வேகமாக பரவுவதாக அஞ்சுகின்றனர், மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல், மேற்கு வங்கம் பர்கானாஸ் மாவட்டத்தில் போங்கான் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு ஜூலை 25ஆம் தேதி
கரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 68 வயது நோயாளியான மாதவ் நாராயண் தத் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், மருத்துவமனையின் வெளியிலிருந்து உள்ளே அவரை கூட்டி செல்வதற்கு உதவி கேட்டேன். ஆனால் யாரும் முன்வரவில்லை. பின் அங்கு வந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போங்கான் துணைப்பிரிவு மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்கர் பிரசாத் மகாடோ கூறுகையில், இது குறித்து நாங்கள் தற்போது தெரிந்துகொண்டோம். மிகவும் பரிதாபமானது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் என யாராவது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த கரோனா நோயாளியின் உடல்
கொல்கத்தா: பெஹாலாவில் 55 வயதான கரோனா வைரஸ் நோயாளியின் உடல் அவரது வீட்டில் 18 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.