ETV Bharat / bharat

எச்சரிக்கை.. பிரதமர் நிவாரணம் என்ற பெயரில் போலி யூ.பி.ஐ. கணக்குகள்! - Hyderabad cops book case

ஹைதராபாத்: பிரதமர் நிவாரண நிதி என்ற பெயரில், போலியான யூபிஐ ஐடிகள் தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Fake UPI Ids of PM CARES created, Hyderabad cops book case பிரதமர் நிவாரணம் என்ற பெயரில் போலி வங்கிக் கணக்கு போலி வங்கிக் கணக்கு பிரதமர் நிவார நிதி Fake UPI Ids of PM CARES Hyderabad cops book case PM CARES

author img

By

Published : Apr 14, 2020, 4:20 PM IST

பிரதமர் நிவாரண நிதி வங்கிக் கணக்கு போன்றே சில போலியான யூபிஐ (UPI) ஐடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்படுவதாக இணையதள குற்றப் பிரிவு காவலர்களுக்கு புகார்கள் கிடைத்தது.

இது தொடர்பாக இணையதள குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து இணையதள குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் கே.வி.எம். பிரசாத் கூறுகையில், “பிரதமர் நிவாரண நிதி வங்கிக் கணக்கான பி.எம் .கேர்ஸ் (pmcares@sbi) போன்று, அதனை ஒத்த வகையில் பல போலி ய.பி.ஐ. ஐடிகள் புழக்கத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை குழு ((சி.இ.ஆர்.டி) இணையதள குற்றப்பிரிவு காவலர்களை எச்சரித்தது.

இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த போலி யூபிஐ (UPI) ஐடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் தொடங்கியுள்ளனர். விசாரணைக்கு பின்னர் இது தொடர்பான விவரங்கள் தெரியவரும்” என்றார்.

இந்த போலிக் கணக்குகள் pmcares@pnb, pmcares@hdfcbank, pmcare@yesbank, pmcare@ybl, pmcare@upi, pmcare@sbi, pmcares@icici போன்ற முகவரிகளில் செயல்படுகிறது.

ஆகவே மக்கள் நன்கொடை அளிக்கும் முன்னர் வங்கிக் கணக்கு மற்றும் யூபிஐ ஐடிகளை சரிபார்க்க வேண்டும். சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை தொடங்கிய நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.