மத்திய டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய அளவிலான குண்டுவெடிப்பு இன்று நிகழ்ந்தது. குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட ராணுவ வீரர்கள், பாசறைக்குத் திரும்பும் நிகழ்வை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அரசின் மூத்த அலுவலர்கள் ஆகியோர் விஜய் சவுக்குக்கு வந்திருந்தனர். அங்கிருந்து 1.4 கிமீ தொலைவில் ஐஇடி குண்டுவெடித்தது.
இந்நிலையில், அந்நாட்டு அமைச்சர் காபி அஷ்கெனாசியை தொடர்புகொண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இது குறித்து ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில், "இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காபி அஷ்கெனாசியை தொடர்புகொண்டு குண்டுவெடிப்பு குறித்து பேசினேன். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
-
Spoke just now to Israeli FM @Gabi_Ashkenazi about the explosion outside the Israeli Embassy. We take this very seriously. Assured him of the fullest protection for the Embassy and Israeli diplomats. Matter is under investigation and no effort will be spared to find the culprits.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke just now to Israeli FM @Gabi_Ashkenazi about the explosion outside the Israeli Embassy. We take this very seriously. Assured him of the fullest protection for the Embassy and Israeli diplomats. Matter is under investigation and no effort will be spared to find the culprits.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 29, 2021Spoke just now to Israeli FM @Gabi_Ashkenazi about the explosion outside the Israeli Embassy. We take this very seriously. Assured him of the fullest protection for the Embassy and Israeli diplomats. Matter is under investigation and no effort will be spared to find the culprits.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 29, 2021
தூதரகத்திற்கும் தூதர்களுக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளோம். குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.