ETV Bharat / bharat

டெல்லி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் !

டெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் !
டெல்லி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் !
author img

By

Published : Aug 12, 2020, 4:57 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9ஆம் தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து, தொடர்ச்சியாக அவருக்கு தலைசுற்றலும், இடது கையில் உணர்ச்சியற்ற நிலையும் நீடித்ததாக அறிய முடிகிறது.

இந்நிலையில், 10ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதனிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகி வருகிறது. அவருக்கு தற்போது வென்டிலேட்டர் கருவி உதவியுடன் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலையில் சொல்லும் அளவுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை. அவரை பல்துறை வல்லுநர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.