சிறுமி நிஷுவின் கூற்றுப்படி, இங்குள்ள ஒவ்வொரு வீடும் பெண் குழந்தைகளின் பெயரிலே அறியப்படுகிறது. இந்த பெருமைமிகு பரப்புரை, ஏதோ 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடக்கவில்லை. பாட்டி, தாய் என்று பல தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கியுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்.
இதே மாநிலத்தில்தான் பெண் குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைப்பதும், சுவருக்கு பின்னால் மறைத்து வைப்பதும் தொடர்கிறது. இதையெல்லாம் இந்தப் பரப்புரை மாற்றும். இந்தப் விழிப்புணர்வை ஹரியானா மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் இந்த விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகள் கல்வி பெற்று, சிந்தித்து வாழ்வில் வெற்றி பெற முடியும்.