ETV Bharat / bharat

காஷ்மீரை பார்வையிட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு வருகை! - காஷ்மீரை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற குழு

டெல்லி: 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு காஷ்மீரை நாளை பார்வையிட உள்ளது.

Kashmir
author img

By

Published : Oct 28, 2019, 5:40 PM IST

Updated : Oct 28, 2019, 7:52 PM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இணையம், தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டன.

காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாள்களில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவைகள் மட்டும் மாநிலத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்நிலையில், 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நாளை காஷ்மீரை பார்வையிட உள்ளது. முன்னதாக, இந்தியா வந்திருந்த அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து காஷ்மீரின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு சந்தித்துப் பேசவுள்ளது. இது குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தன் தாயின் ட்விட்டர் பக்கத்தில், "அப்பாவி மக்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு சந்தித்து காஷ்மீர் நிலை குறித்து கேட்டறிய வேண்டும்.

காஷ்மீரை உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தும் இரும்புத்திரையை விலக்க வேண்டும். மாநிலத்தில் நிலவும் பதற்ற நிலைக்கு இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'சுஜித்தை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரம்' - பிரதமர் நரேந்திர மோடி

Intro:Body:

European parliamentary panel to visit Kashmir on October 29

https://www.indiatoday.in/india/story/european-parliamentary-panel-kashmir-october-29-1613391-2019-10-28

Conclusion:
Last Updated : Oct 28, 2019, 7:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.