- நாவலர் பிறந்தநாள்
அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான இரா. நெடுஞ்செழியன் பிறந்தநாள் இன்று. இவர் நாவலர் என அழைக்கபெறுகிறார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார்.
- உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இன்று (ஜூலை11) உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- சின்னமனூரில் முழு ஊரடங்கு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி, கம்பத்தைத் தொடர்ந்து சின்னமனூரிலும் முழு ஊரடங்கு இன்று (ஜூலை11) முதல் அமலுக்கு வந்துள்ளது.
- மும்பை குண்டுவெடிப்பு
2006ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 209 பேர் கொல்லப்பட்டனர்.
பிறந்தநாள்
- குன்றக்குடி அடிகளார் பிறப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 1925ஆம் ஆண்டு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.
- இயக்குனர் பாலா
நந்தா, பிதாமகன், சேது, அவன் இவன், நான் கடவுள், பரதேசி, தாரை தப்பட்டை என தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தில் பயணிக்கும் பாலா இன்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர் ஆவார்.
- கரோலினா வோஸ்னியாக்கி
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கிக்கு இன்று 29ஆவது பிறந்தநாள்.
இறப்பு
- முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன்
மறைந்த அமைச்சர், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ, செந்தூர் பாண்டியன் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.