புதுவை பொறியியல் கல்லூரியில் புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அதில்;
புதுவை பொறியியல் கல்லூரியில் இயங்கும் எட்டு துறைகளில் பல்வேறு முதுகலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கணிப்பொறியியல், தகவல் தொழில் நுட்ப துறைகள் சார்பாக இரண்டு புதிய முதுகலை (எம்.டெக்.) படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டேட்டா சயின்ஸ் (Data Science), இன்டர்நெட் ஆப் திங்ஸ் (Internet of Things) என்னும் இந்த இரண்டு படிப்புகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கழகமும் (AICTE) புதுவை பல்கலைக்கழகமும் அனுமதி அளித்துள்ளன. இந்த இரண்டு படிப்புகளும் தற்போது நடத்தப்படும் டிஸ்ட்ரிபூட்டெட் கம்ப்யூட்டிங் சிஸ்டம் (M.Tech. Distributed Computing System), இன்பர்மேஷன் டெக்னாலஜி (M.Tech. Information Technology) ஆகிய படிப்புகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த இரண்டு புதிய பிரிவுகளுடன் ஏற்கெனவே நடைபெற்று வரும் இன்போர்மஷன் செக்யூரிட்டி (M.Tech. Information Security) பிரிவும் தொடர்ந்து நடத்தப்படும். புதுவை பொறியியல் கல்லூரியின் 35 வருட சரித்திரத்தில் முதன் முறையாக இந்த கல்வியாண்டு முதுகலை மேலாண்மை படிப்பு (MBA) அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோருக்கு ஏதுவாக இந்த மேலாண்மை படிப்பு இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. (MBA – Innovation, Entrepreneurship and Venture Development)அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் புதிய முடிவின் படி கணிப்பொறி துறையின் மூலம் நடத்தப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (MCA: Master of Computer Application) படிப்பு இந்த ஆண்டு முதல் இரண்டு வருட படிப்பாக (நான்கு பருவங்கள்) குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்பிற்கான வாய்ப்புகளை தரும் மேற்குறிப்பிட்ட புதிய பிரிவுகள் உள்ளடக்கிய 11 எம்.டெக். பிரிவுகள் மற்றும் எம்.எஸ்.சி., (M.Sc.) எம்.பில் (M.Phil) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து ஆகஸ்டு 10-ந் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதள முகவரியில் (http://www.pec.edu) காணலாம். அதே சமயம் சிறப்பம்சமாக இந்த வருடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் கூடுதலாக மெக்கட்ரானிக்ஸ் (B.Tech. Mechatronics) இளங்கலை படிப்பு AICTE அனுமதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.