ஜம்மு காஷ்மிரில் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அங்குள்ள நிர்வாக அமைப்புகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ”ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம். அதனைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என நம்புகிறோம். அதை நடைமுறைப்படுத்தவதில் முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறோம்.
மாவட்டம், வட்டாரம், கிராமம் என்ற மூன்று நிலைகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் புதிய அரசியல், நிர்வாக அமைப்பை உருவாக்குவோம். இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்” என்றார்.
வட்டார வளர்ச்சி நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீரின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் லால் சௌக்கில் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை