ETV Bharat / bharat

மாருதி சுசுகி மானேசர் ஆலையில் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா தொற்று - மாருதி சுசுகி மானேசர் ஆலையில் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா தொற்று

சண்டிகர்: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் ஊழியர் ஒருவருக்கு, கரோனா தொற்று கடந்த மே 22ஆம் தேதி உறுதிபடுத்தப்பட்டது.

Employee at Maruti's Manesar plant tests positive for COVID-19  Maruti's Manesar plant  COVID-19  business news  Maruti Suzuki  மாருதி சுசுகி மானேசர்  மானேசர் ஆலைப்பணியாளர் கரோனா
மாருதி சுசுகி- மானேசர் ஆலையில் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா தொற்று
author img

By

Published : May 24, 2020, 4:01 PM IST

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஊரடங்கு காரணமாக சுமார் 50 நாட்களுக்குப் பின்பு கடந்த மே 18அன்று மானேசர், ஹரியானா மாநிலத்திலுள்ள ஆலையைத் திறந்து உற்பத்தியைத் தொடங்கியது. இந்நிலையில், அந்த ஆலையில் பணிபுரிந்த ஊழியருக்கு கடந்த மே 22ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து அந்த ஆலையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "கடந்த 15ஆம் தேதி நல்ல உடல்நிலையில் தான் அவ்வூழியர் பணியில் சேர்ந்தார். அவருடைய பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட உடன், அவர் பணிக்கு வரவில்லை. அவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசு வழிகாட்டுதலின்படி, அவருக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசு பின்பற்றக்கூடிய நடைமுறைகள் அனைத்தும் ஆலையில் பின்பற்றப்படுகிறது. கூடுதலாக, இந்த நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க கோவிட்-19 பணிக்குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த 2.9 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.