ETV Bharat / bharat

சுஷாந்த் சிங் நண்பருக்கு அமலாக்கத்துறை சம்மன்! - வணிக மேலாளர் ஸ்ருதி மோடி,

மும்பை : நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு குறித்து விசாரிக்க, அவரது முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி, நண்பர் சித்தார்த் பிதானி ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ed
ed
author img

By

Published : Aug 7, 2020, 5:16 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரா ஜ்புத் (வயது 34), கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தின் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் மரணம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாட்னா காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, பாட்னா காவல் துறையினர் பதிந்துள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பிகார் முதலமைச்சர் நிதீஷ் அகர்வால் இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணை சிபிஐ கைக்குச் சென்றது. வழக்கை விசாரித்த சிபிஐ, ரியா உட்பட சந்தேகிக்கப்படும் ஆறு நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் எடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க ஆகஸ்ட் ஏழாம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Enforcement Directorate (ED) summons Shruti Modi, former business manager of #SushantSinghRajput, asking her to appear before them today.

    ED also asks Sushant's friend Siddharth Pithani to appear before the agency tomorrow, 8th August. pic.twitter.com/K8BZUry3lo

    — ANI (@ANI) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுமட்டுமின்றி, சுஷாந்தின் முன்னாள் வணிக மேலாளர் ஸ்ருதி மோடியும் இன்று ஆஜராக அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது. அதே போல், சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானியை ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.