நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், இந்தச் சூழலில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனது பணிகளில் தொய்வின்றி வழக்கம்போல் செயல்பட்டுவருகின்றன.
முக்கிய விசாரணை பிரிவான அமலாக்கத்துறை இன்று கட்டுமானத்துறையில் நடைபெற்ற ஊழலை கண்டறிந்து தற்போது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள அகில் குமார், சுனில் குமார் என்ற இருவர் வெளிநாட்டு முதலீடு வழியாக போலி ரியல் எஸ்டேட் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் மோசடி செய்துள்ளனர். இந்த முறைகேட்டை கண்டறிந்த அமலாக்கத்துறை, அவர்களின் 56 அடுக்குமாடி குடியிருப்புகள், 16 வில்லாக்களை முடக்கியுள்ளது.
மேலும், இது தொடர்பான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் 90 விழுக்காடு குறைந்த உணவக வருவாய்...!