தலைநகர் டெல்லியில் உள்ள நாங்கொலாய் என்ற இடத்தில் இன்று (டிசம்பர் 25) அதிகாலை 5.02 மணியளவில் 2 நிமிடங்களுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.3 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதை உணர்ந்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த வாரத்தில் இது இரண்டாவது நிலநடுக்கமாகும். நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
டெல்லியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ எதுவும் பதிவாகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.