இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் ஓமனில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் செல்கிறார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார். அங்கு இரண்டு நாள்கள் தங்கியிருந்து 19ஆவது கூட்டு ஆணைய கூட்டத்தில் (Joint Commission meeting) கலந்துகொள்கிறார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோயல் செப்டம்பர் மாதம் தெஹ்ரான் சென்றிருந்தார். அப்போது அவர், ஜெய்சங்கரின் பயணம் குறித்து தகவல் தெரிவித்தார்.
ஜெய்சங்கருக்கு, இது முதல் ஈரான் பயணமாகும். எனினும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரை மூன்று முறை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து ஜெய்சங்கர் அன்றைய தினமே (டிச24) ஓமன் செல்கிறார். அங்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் யுசுப் பின் அலாவியை சந்தித்து பேசுகிறார்.
அப்போது இரு நாட்டு தலைவர்களும் கடல் போக்குவரத்தில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரம் குறித்து பேச உள்ளனர். இந்தியாவின் வர்த்தக நண்பனாக ஓமன் திகழ்கிறது. 2018-19ஆம் ஆண்டுகளில் மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடந்துள்ளது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு என்ற பட்டியலில் ஓமன் உள்ளது. ஓமனில் 7 லட்சத்துக்கு 80 ஆயிரம் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். அந்த வகையில் இந்தியர்கள் வசிக்கும் இரண்டாவது பெரிய வெளிநாடாக ஓமன் திகழ்கிறது.
இதையும் படிங்க: RCEP குறித்து இந்தியா-சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் விரைவில் பேச்சுவார்த்தை