பெங்களூர்: கர்நாடக மாநிலம் கிருஷ்ணபுரம் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபரை இரண்டு ரவுடிகள் குடிபோதையில் தாக்கியுள்ளனர். நடுசாலையில், குடித்துவிட்டு கத்திக்கொண்டிருந்த இரண்டு ரவடிகள், கத்தி, கட்டையால் தேவேந்திரா என்பவரைத் தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தேவேந்திரா இதனை வீடியோவாக எடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரவுடிகள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.
இதையும் படிங்க: சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் : வைரல் காணொலி