பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஆன்டி ட்ரோன் இயந்திரத்தை டிஆர்டிஒ அமைப்பு வடிவமைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப் படை, ராணுவம், துணை ராணுவப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆன்டி ட்ரோன் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
மூன்று கிலோ முதல் நான்கு கிலோ வரையிலான போதைப் பெருள்களை கடத்துவதற்கு சமீப காலமாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் போல்சனரோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட குடியரசு தின விழாவில் ஆன்டி ட்ரோன் இயந்திரம் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.
மோடி- ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்கவுள்ள சாலை பேரணிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குஜராத்தில் ஆன்டி ட்ரோன் இயந்திரம் தரை இறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரவேற்கப்படும் ட்ரம்ப்: புறக்கணிக்கப்படும் கிராம மக்கள்!