இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த வரைவு அறிக்கை குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும், நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடித்தில் அரசு கொண்டுவரும் திட்டங்களில் மக்களின் குரலுக்கு முக்கியத்துவத்தை குறைக்கும் விதமான அம்சங்கள் வரைவில் உள்ளன எனவும் பொது கேள்விக்கான நோட்டீஸ் காலம் மிகக்குறைவாக உள்ளதாகவும் இந்தக் கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் கடிதம் ஒன்றை பிரகாஷ் ஜவடேகர், சரியான புரிதலின்றி முன்முடிவுகளுடன் இந்த கடித்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார். அதில் அவர், 'மக்களின் குரலை தடுக்கும் விதமாக வரைவு தயார் செய்யப்படவில்லை, மாறாக மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அர்த்தப்படுத்தும் விதமாக வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
-
Today morning only I had sent you a detailed response to your July 25, 2020 letter, which was delivered at your residence office, still you chose to write this letter and make it public through twitter. I am sharing today's letter here once again.#DraftEIA2020 https://t.co/T95z9Uj83h pic.twitter.com/fSP9eSqyFH
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today morning only I had sent you a detailed response to your July 25, 2020 letter, which was delivered at your residence office, still you chose to write this letter and make it public through twitter. I am sharing today's letter here once again.#DraftEIA2020 https://t.co/T95z9Uj83h pic.twitter.com/fSP9eSqyFH
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 6, 2020Today morning only I had sent you a detailed response to your July 25, 2020 letter, which was delivered at your residence office, still you chose to write this letter and make it public through twitter. I am sharing today's letter here once again.#DraftEIA2020 https://t.co/T95z9Uj83h pic.twitter.com/fSP9eSqyFH
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 6, 2020
திட்டங்களுக்கு தவாறான ஒப்புதல் எதுவும் அளிக்க முடியாத வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மாறாக தவறவு நிகழ்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை, அபராதம் எடுக்கும் வகையில் வரைவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'நாட்டின் 33 மாணவர்களுக்கும் கல்வி சென்றடையும்' - மத்திய அமைச்சர் பொக்ரியால் உறுதி