மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜலீஸ் அன்சாரி(68), ராஜஸ்தானின் அஜ்மீர் சிறையிலிருந்து 21 நாள் பரோலில் வெளியேவந்தார். பரோலின்போது, தினமும் காலை 10.30 மணி முதல் 12 மணிவரை அக்ரிபாடா காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், வியாழக்கிழமை (ஜனவரி 16) அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து பிற்பகல், தன் தந்தையை காணவில்லை என்று ஜலீஸ் அன்சாரியின் மகன் ஜெய்ட் அன்சாரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து ஜலீஸ் அன்சாரியை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று கான்பூரிலுள்ள மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நாட்டைவிட்டு தப்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் படுகொலை நிகழ்த்துகின்றனர்' - பிரக்யா தாக்கூர்