உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவத்தை விண்கலத்தின் மூலம் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 என்ற விண்கலத்தை இந்தியா இன்று விண்ணில் செலுத்த ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது.
இது குறித்து பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் சித்தார்த்தா நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ராக்கெட்டின் இன்ஜினில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் காரணமாக சந்திராயன்-2 விண்ணில் செலுத்துவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதுபோன்ற எண்ணெய்க் கசிவுகள் ராக்கெட் வெடித்து சிதறுவதற்கே கூட காரணமாகலாம் என அச்சம் தெரிவித்த அவர், இந்த எண்ணெய்க் கசிவை சரிசெய்ய 24 மணி நேரமோ, சில வாரங்களோ ஆகலாம் என்றார். சில வாரங்களுக்குப் பிறகு ஏவுகணை மீண்டும் விண்ணில் செலுத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.