தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் ஆதார் பான் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினத்துக்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.
வீட்டிலிருந்தே இணைக்கலாம்.!
ஆதார் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள் incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை.
-
Don't miss the deadline!
— Income Tax India (@IncomeTaxIndia) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is mandatory to link your PAN and Aadhaar before 31st March, 2020.
You can do it through Biometric Aadhaar authentication & also by visiting the PAN service centers of NSDL and UTITSL #PANAadhaarLinking
Link: https://t.co/JudH8IqpQb pic.twitter.com/igAfV8vJUi
">Don't miss the deadline!
— Income Tax India (@IncomeTaxIndia) March 16, 2020
It is mandatory to link your PAN and Aadhaar before 31st March, 2020.
You can do it through Biometric Aadhaar authentication & also by visiting the PAN service centers of NSDL and UTITSL #PANAadhaarLinking
Link: https://t.co/JudH8IqpQb pic.twitter.com/igAfV8vJUiDon't miss the deadline!
— Income Tax India (@IncomeTaxIndia) March 16, 2020
It is mandatory to link your PAN and Aadhaar before 31st March, 2020.
You can do it through Biometric Aadhaar authentication & also by visiting the PAN service centers of NSDL and UTITSL #PANAadhaarLinking
Link: https://t.co/JudH8IqpQb pic.twitter.com/igAfV8vJUi
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் வாடிக்கையாளர்களே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும்.
ஆதார் எண், பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.
எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து UIDPAN<12 டிஜிட் ஆதார் எண்><10 டிஜிட் பான் எண்> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.
ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லையென்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்துக் கொள்ளுங்கள்.