இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்ககம், “கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் முற்றிலும் விமான சேவை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஜூன் மாதத்தில் 19.84 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை 83.5 விழுக்காடு குறைந்துள்ளது.
இதில் 2020 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3.5 கோடி பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் இதே மாத இடைவெளியில் சென்ற ஆண்டில் ஏழு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
விமான நிறுவனங்களின் தகவல்படி, கோ ஏர் 57.9 விழுக்காடும், ஏர் இந்தியா மற்றும் ஏர் ஆசியா இந்தியா தலா 56.5 விழுக்காடும் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...கொஞ்சம் கவனமாக கேளுங்க🤫 உலக எமோஜி 😎 தின ரகசியங்கள் 🤫 அறிவோம்!