பி.எம்.கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பி.எம்.கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து நேற்று(ஆக.18) தீர்ப்பளித்தது.
-
Supreme Court has delivered a judgement on the legality and legal accountability of PM-CARES FUND. The judgement is final but will be contested for a long time in academic circles.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Supreme Court has delivered a judgement on the legality and legal accountability of PM-CARES FUND. The judgement is final but will be contested for a long time in academic circles.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020Supreme Court has delivered a judgement on the legality and legal accountability of PM-CARES FUND. The judgement is final but will be contested for a long time in academic circles.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், " பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இறுதியானது தான். இருப்பினும், பி.எம் கேர்ஸ் மீதான விவாதங்கள் கல்வி வட்டாரங்கள், அறிவார்ந்தவர்கள் மத்தியில், கேள்விகள் தொடர்ந்து எழும் அதைத் தடுக்க வாய்ப்பில்லை.
அந்த அறக்கட்டளை நிதியத்தின் வெளிப்படைத்தன்மை, கணக்குவழக்கு மற்றும் மேலாண்மை நடைமுறைகள் உள்ளிட்ட பிற அம்சங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. கடந்த 2020 மார்ச்சில் முதல் ஐந்து நாட்களில், ரூ.3,076 கோடியை வழங்கிய நன்கொடையாளர்கள் யார் என்று நாடு அறிய வேண்டும்.
-
There are other aspects of PM-CARES FUND on which the Supreme Court had no occasion to pronounce judgement. These are transparency, disclosure and management practices concerning the Fund.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">There are other aspects of PM-CARES FUND on which the Supreme Court had no occasion to pronounce judgement. These are transparency, disclosure and management practices concerning the Fund.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020There are other aspects of PM-CARES FUND on which the Supreme Court had no occasion to pronounce judgement. These are transparency, disclosure and management practices concerning the Fund.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020
மேலும் நன்கொடையாளர்களுக்குள் சீன நிறுவனங்கள் அடங்குமா ? என தெரிய வேண்டும். ஏப்ரல் 1, 2020 முதல் பெறப்பட்ட தொகை மற்றும் நன்கொடையாளர்கள் பற்றிய விபரங்களை அரசு வெளியிட வேண்டும். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு, பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தகவல் சொல்லப்படுகிறது.
-
Are utilisation certificates (UC) demanded and received from the recipients?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
If the Fund is beyond the ambit of RTI, who will answer these vital questions?
">Are utilisation certificates (UC) demanded and received from the recipients?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020
If the Fund is beyond the ambit of RTI, who will answer these vital questions?Are utilisation certificates (UC) demanded and received from the recipients?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 19, 2020
If the Fund is beyond the ambit of RTI, who will answer these vital questions?
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பணிகளுக்காக திரட்டப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி இதுவரை எந்தெந்த மாநிலங்களுக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு, யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன? பணத்தை ஒதுக்கீடு செய்ய கைக்கொள்ளப்பட்ட நடைமுறை என்ன? நிதி வழங்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து அதற்குரிய பயன்பாட்டு சான்றிதழ்கள் (யுசி) பெறப்படுகின்றனவா?
இந்த அறக்கட்டளையின் நிதியானது, தகவல் அறியும் சட்ட உரிமைக்கு அப்பாற்பட்டது என்றால், இந்த முக்கிய கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? மத்திய அரசு பதில் சொல்லுமா ? " என அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.