ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் நேரடி ஆட்சி; புதுச்சேரியில் மறைமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்! - புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நேரடியாகவும், புதுச்சேரியில் மறைமுகமாகவும் மத்திய அரசு ஆட்சி செய்து வருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Oct 17, 2019, 10:47 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரெயின்போ நகர் சந்திப்பு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சாதாரண முதலமைச்சரே அல்ல. மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தட்டிக் கேட்காமல் இருக்கும் அடிமை முதலமைச்சர். தமிழ்நாடு ஆளுநர் செய்யும் அராஜகத்தை தட்டிக்கேட்க தைரியமில்லாமல் இருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புரட்சிகரமாக முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி நேரடியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் மறைமுகமாக ஆளுநர் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும் நலத்திட்டங்களை கிரண்பேடி தடுத்து வருகிறார். இலவச அரிசி மற்றும் வேஷ்டி சேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காரணம் ஆளுநர் கிரண்பேடி மட்டுமே.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஒரு துரோகி. இதை நான் சொல்லவில்லை மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா சொல்லியதுதான். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு புதுச்சேரி முதலமைச்சர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்கலாமே:அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவு

Intro:தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதாவது மத்திய அரசு ஆட்சி நேரடியாக செய்துகொண்டிருக்கிறது புதுச்சேரியில் மறைமுகமாக பாஜக ஆளுநர் மூலமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்

Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ரெயின்போ நகர் சந்திப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் சாதாரண முதல்வர் அல்ல அடிமை முதல்வர் என்றும் கைகட்டி வாய் பொத்தி அடிமை யாக இருப்பது ,அடிமை ஆட்சி எடுபிடி ஆட்சி மாநில உரிமை பறிக்கப் பட்டாலும் தட்டிக் கேட்பதில்லை தமிழக ஆளுநர் செய்யும் அராஜகத்தை தட்டிக்கேட்கும் தைரியமில்லாமல் இருக்கிறார் என்றார்

புதுச்சேரி மாநிலத்தில் புரட்சிகரமான முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதாவது மத்திய அரசு ஆட்சி நேரடியாக செய்துகொண்டிருக்கிறது புதுச்சேரியில் மறைமுகமாக பாஜக ஆளுநர் மூலமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது புதுச்சேரியில் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும் நலத்திட்டங்களை கிரண்பேடி தடுத்துக் கொண்டு வருகிறார் இலவச அரிசி இலவச வேஷ்டி சேலை தடுத்து நிறுத்தப்பட்டது காரணம் ஆளுநர் கிரண்பேடி தான்

என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஒரு துரோகி இதை நான் சொல்லவில்லை மறைந்த அதிமுக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சொல்லித்தான் என்றார்

ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு தமிழக முதல்வர் எடுத்துக்காட்டு ஒரு முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு புதுச்சேரி முதல்வர் தான் என்றார்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கம் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தது புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் வருகிற 21ம் தேதி இடைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரவு தருமாறு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Conclusion:தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதாவது மத்திய அரசு ஆட்சி நேரடியாக செய்துகொண்டிருக்கிறது புதுச்சேரியில் மறைமுகமாக பாஜக ஆளுநர் மூலமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.