ETV Bharat / bharat

ராகுலுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கடிதம்: சஞ்சய் நிருபம் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கோரி ராகுல் காந்திக்கு எதிராக சர்ச்சை வெடித்துள்ளதால், கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னிஹோத்ரிக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பு இதோ.

Sanjay
Sanjay
author img

By

Published : Aug 29, 2020, 7:17 PM IST

கேள்வி- காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கான சர்ச்சை இப்போது ஏன் ஏற்பட்டுள்ளது?

கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி எதிரொலியாக ராகுல் காந்தி பதவி விலகியதற்கு பின்னர் தான் இந்த தலைமை சர்ச்சை கிளம்பியது. தலைமைப் பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்றும், காந்தி குடும்பத்தைத் தவிர வேறு தலைவர்களில் ஒருவரை தலைமைப் பொறுப்பிற்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் ராகுல் தான் வலியுறுத்தினார்.

தலைமைப் பொறுப்பிற்கான அந்த நபரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் காங்கிரஸின் அடுத்த தலைவர் குறித்த வாதங்கள் நடக்கின்றன.

கேள்வி- சோனியா காந்திக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ள சில மூத்த தலைவர்கள், காங்கிரஸுக்கு முழுநேர தலைவர்கள் தேவை என்றும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேன்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதை நீங்கள் சதி என்று கூறுகிறீர்கள். ஏன்?

இவ்விவகாரத்தில் சிக்கல் ஏதுமில்லை. எந்த ஒரு கட்சிக்கும் முழு நேரத் தலைவர்கள் தேவை என்பது நல்ல விஷயம் தான். ஆனால் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தைப் பொறுத்தவரை சதி முயற்சி என்று தான் அதைக் கூறுவேன். காங்கிரஸுக்கும் காந்தி குடும்பத்தினருக்கும் இடையிலிருக்கும் ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சி இது.

ராகுல் காந்திக்கு எதிரான இதுபோன்ற சதி வேலைகள் தில்லியில் உள்ள சில கட்சித்தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் எழுதப்பட்ட கடிதம். கட்சியின் ஒரு தொண்டனாக, இப்போது தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பது தான் எனது கருத்து.

கேள்வி- ஆனால் ஏன்?

ஏனென்றால், இதுபோன்ற தேர்தல் நிச்சயமாக கட்சியின் ஒற்றுமையை குலைக்கும், பிரிவினையை ஏற்படுத்தும். இதன் விளைவாக தலைவர்கள் விரோத மனப்பான்மை கொண்டு கட்சியைப் பிளவுபடுத்துவார்கள். கட்சிக்குள் தங்களது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தைக் கைப்பற்ற சாதூர்யமாக காய் நகர்த்துவார்கள். கட்சியை ஒருங்கிணைத்து ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நிலையில் இருக்கும் நாம், இந்த சர்ச்சைகளை உருவாக்கிவிடக்கூடாது.

கேள்வி-அப்படியென்றால் உட்கட்சி ஜனநாயகம் என்பது தவறான ஒன்றா?

அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் உட்கட்சி ஜனநாகம் மற்றும் கட்சித் தேர்தல் இருக்க வேண்டும். ஆனால் விமர்சகர்களை பார்த்து ஒன்று கேட்கிறேன். எத்தனை கட்சிகளில் இந்த உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது, எத்தனை கட்சிகளுக்குள் தேர்தல் நடத்தப்படுகின்றன. எங்களைப் பார்த்து கேள்விகள் கேட்கும் கட்சிகளுக்குள் இந்த உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இவர்களில் எத்தனை பேர் தேர்தலில் நின்று வென்றிருக்கிறார்கள். மிக வலிமையான ஒரு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமென்றால், இது போன்ற பூசல்களைக் களைந்து ஓரணியில் ஒன்றாக நிற்க வேண்டும்.

கேள்வி-சரி, இப்போது கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டால், ராகுலுக்கு எதிராக யார் நிற்பார்கள்?

தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன். ராகுல் போட்டியிட்டால் அவர் தான் வெற்றி பெறுவார். கட்சியின் இளைஞர் அணியான இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பில் அனைவரும் ராகுலைத் தான் ஆதரிக்கின்றனர்.

நீங்கள் வேண்டுமென்றால் கட்சியின் இளைஞரணியினர், தொண்டர்கள், கட்சியின் மாநில முதல்வர்கள் ஆகியோரிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். அனைவரது வாக்கும் ராகுலுக்குத் தான் கிடைக்கும். அதற்காக, கட்சிக்குள் தேர்தல் நடத்துமாறு யாரேனும் வலியுறுத்திக் கொண்டே இருந்தால், அது கட்சிக்கு நல்லதல்ல.

கேள்வி-காங்கிரஸ் தற்போது சந்திக்கும் மிகப் பெரிய சவால் என்ன?

கடந்த 18 மாதங்களாக கட்சியில் தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய முழுநேரத் தலைவர் இல்லாதது குறை தான். கட்சிக்குள் முழு மூச்சாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போதுள்ள சூழலால் தளர்ந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸைக் காட்டிலும் வலுவடைந்து கொண்டே போகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர், நாடு முழுவதும் பயணம் செய்து கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

கேள்வி- அது எப்போது நடக்கும்?

அடுத்த ஆறு மாதங்களில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடத்துவதற்கு, ஆக்ஸ்ட் 24ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த மார்ச்-ஏப்ரல் 2021 மாதங்களில் தலைமைப் பொறுப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களும், பல்வேறு பிரிவுகளுக்கான தேர்தல் நடத்தப்படும், அத்துடன் ராகுல் காந்தி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க: பாஜகவின் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப், பேஸ்புக் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.