ETV Bharat / bharat

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ்-என்.ஆர்.காங்., இடையே வாக்குவாதம்

author img

By

Published : Oct 21, 2019, 2:57 PM IST

புதுச்சேரி: இடைத்தேர்தல் நடைபெறும் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையம் அருகே அமர்ந்திருந்த அமைச்சருக்கு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதல்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று காலை ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள வாக்குச்சாவடி அருகே இருந்த காங்கிரஸ் முகவர் இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

இதனைக் கண்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் வாக்குப்பதிவு மையம் அருகே அமர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்

இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய காவல் துறையினர் அமைச்சரை அங்கிருந்து செல்லுமாறு வற்புறுத்தியதையடுத்து, அமைச்சர் ஷாஜகான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க : வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்... காங்கிரஸ் வேட்பாளரைக் கண்டித்து சாலை மறியல்!

Intro:காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் வாக்குச்சாவடி அருகே போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் முகவர் இடத்தில் அமர்ந்ததால் இருதரப்பினரையும் பிரச்சினை ஏற்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர் இதனால் அங்கு பரபரப்பு

Body:புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் இன்று காலை ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் வாக்குச்சாவடி அருகே இருந்த காங்கிரஸ் முகவர் இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் அமைச்சர் பொறுப்பில் பொறுப்பில் உள்ளவர் வாக்குச்சாவடி அருகே அமர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்கள் எனக்கூறி என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வர எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் சாலை போக்குவரத்து அப்போது பாதிக்கப்பட்டது இரு பிரிவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அமைச்சரின் புறப்பட்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியது இதையடுத்து அமைச்சர் ஷாஜகான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் இதனால் பரபரப்பு அடங்கியது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Conclusion:காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் வாக்குச்சாவடி அருகே போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் முகவர் இடத்தில் அமர்ந்ததால் எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பியதால் இருதரப்பினரையும் பிரச்சினை ஏற்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர் இதனால் அங்கு பரபரப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.