ETV Bharat / bharat

கரோனா பரவலுக்கு குட்பை சொன்ன தாராவி!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் நேற்று (டிச. 25) புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.

Dharavi becoming Covid-19 free, no new Covid-19 cases since March

author img

By

Published : Dec 26, 2020, 11:38 AM IST

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் தமிழர்கள் அதிகம் வசித்துவருகின்றனர். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முதலாக இங்குள்ள பாலிகா நகரைச் சேர்ந்த ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார். அதையடுத்து மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அங்கு ஆள்கொல்லி நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. மே மாதத்தில் நோய்ப்பரவலின் வேகம் தீவிரமானது. இதனால் நாடே தாராவியை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.

இதையடுத்து தாராவியில் கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், முழு கவச உடையுடன் வீடு வீடாகச் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஜூன் மாதத்திற்குப் பிறகு அங்கு நோய்ப்பரவல் வேகம் குறைந்தது.

பின்னர் அங்கு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தாராவியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்திருந்தது. மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது புதிய நம்பிக்கையைத் தருவதாக கூறியிருந்தது. எனினும் அதன்பிறகு தாராவியில் கரோனா பாதிப்பு இல்லாத நாள்கள் இல்லை. ஆனால் பெரும்பாலான நாள்கள் பாதிப்பு ஒற்றை இலக்கங்களில்தான் இருந்தது.

இந்நிலையில் முதல் முறையாக நேற்று (டிச. 25) தாராவியில் ஒருவருக்குக்கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை அங்கு மூன்றாயிரத்து 788 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்றாயிரத்து 464 பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போது தாராவியில் 12 பேர் பாதிப்புக்குச் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவரும் குணமடைந்து, தாராவி விரைவில் கரோனா இல்லாத பகுதியாக மாறும் எனவும் அப்பகுதி மக்கள் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.