கரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய வென்டிலேட்டர் கருவிகளை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் அமைந்துள்ள உள்நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. தாமன்-1 எனப் பெயரிடப்பட்ட இந்த வென்டிலேட்டர்களை, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் இருவரும் இணைந்து அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்தனர்.
இதனிடையே, இந்த வென்டிலேட்டர்கள் சரியாக செயல்படவில்லையென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரபாகர், 'தாமன்-1 வென்டிலேட்டரும், நவீன வென்டிலேட்டரும் மிகச் சரியாக வேலைசெய்கின்றன. அது குறித்து எவ்விதப் புகார்களும் இல்லை. இவை கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நன்றாக செயல்படுகிறது.
தாமன்-1 வென்டிலேட்டர்களை ஆரம்ப கட்ட கரோனா நோயாளிகளுக்கும், நவீன வென்டிலேட்டர்களைத் தீவிரமாக கரோனா பாதித்த நோயாளிகளுக்கும் பயன்படுத்துகிறோம். கரோனா நெருக்கடி நிலையைச் சமாளிக்க ராஜ்கோட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் இந்த உள்நாட்டு வென்டிலேட்டரை பத்து நாட்களில் உருவாக்கியுள்ளது. இனி, வரும் காலங்களில் மருத்துவரின் பரிந்துரைகளைக் கேட்டறிந்து வென்டிலேட்டர்கள் மேம்படுத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள்...!